ஜோதிடத்தை பொறுத்தவரை ஒன்பது கிரஹங்களில் ராகு கேதுவை தவிர்த்த்து அனைத்து கிரஹத்திற்கும் பார்வை உண்டு. நான் முந்தய தொடரில் குறிப்பிட்டது போல் ராகு கேது என்பவை நிழல் கிரகாம் மட்டுமே. அவைகள் மற்ற கிரஹங்களை போல் இல்லாமல் அவைகள் ஒளி அற்ற நிழல் கிரகம் மட்டுமே. சூரியனின் நிழல் ராகு, சந்திரனின் நிழல் கேது.
சரி. சென்ற கட்டுரையில் கிரஹங்களின் ஒளி அளவை சனிக்கு வெறும் 1 மதிப்பை பார்க்கும் பொது ஏன் சனிக்கு மட்டும் மிகவும் குறைவான ஒளியளவை பிரதிபலிக்கின்றது என்றால் சனி சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் அதனுடைய ஒளி அளவு பூமிக்கு கிடைப்பது குறைவு. அதுவும் இல்லாமல் சனி ஒரு இருட்டு கிரகம். ராகுவை போல் இல்லாமல் அவை ஒளி பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்தது.
கிரகம் | பார்வை |
---|---|
சூரியன் | 7 |
சந்திரன் | 7 |
செவ்வாய் | 4, 7, 8 |
குரு | 5, 7, 9 |
சனி | 3, 7, 10 |
சுக்ரன் | 7 |
புதன் | 7 |
மேலே குறிப்பிட்டது போல் அனைத்து கிரகமும் தான் இருக்கும் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டை பார்கும். எடுத்துக்காட்டாக ஒரு கிரகம் லக்கினத்தில் இருக்கும் பட்சத்தில் அந்த கிரகம் கண்டிப்பாக தனது ஏழாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்க்கும்.
சூரியன், சந்திரன், புதன் மற்றும் சுக்ரன் ஆகிய கிரஹங்களுக்கு ஏழாம் பார்வை மட்டுமே உள்ளது.
செவ்வாய், குரு மற்றும் சனிக்கு ஏழாம் பார்வை மட்டுமில்லாமல் சிறப்பு பார்வைகள் உள்ளது .
செவ்வாய்க்கு தான் இருக்கும் வீட்டில் இருந்து நான்காம் பார்வை மற்றும் எட்டாம் பார்வைகள்,
குருவிற்கு தான் இருக்கும் வீட்டில் இருந்து ஐந்தாம் பார்வை மற்றும் ஒன்பதாம் பார்வைகள்,
சனிக்கு தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வைகள் சிறப்பு பார்வைகள்.
சரி. கிரஹங்களின் பார்வைகள் நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பது அந்த கிரஹத்தின் தன்மையை பொறுத்து. பொதுவாக இயற்கை சுப கிரஹங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சுக்ரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் ஆகிய கிரஹங்களின் பார்வை நன்மை அளிக்கும் தன்மை உடையது. இயற்கை பாப கிரஹங்கள் என்று சொல்லக்கூடிய சனி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரஹங்களின் பார்வை தீமை அளிக்கும்.
இங்கே கிரஹங்கள் அணைத்து சுயமாக பார்வை கிடையாது, சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன.
கிரஹத்தின் பார்வையானது அதன் தன்மையை பிரதிபலிக்கும், அதாவது அதனுடைய காரகத்துவதை பிரதிபலிக்கக்கூடியது. எடுத்துக்காட்டாக சனியின் பார்வை லக்கினத்தில் விழும்போது அந்த ஜாதகர் புடிவாத குணம், கஞ்சத்தனம் மற்றும் சுத்தம் இல்லாதவராக இருக்க வைப்பார். மற்ற கிரஹத்தின் பார்வை அல்லது சுப கிரகம் லக்கினத்தில் இல்லாமல் இருந்தால் மேலே சொன்ன பலன் இருக்கும்.
அதே போல் சுப கிரஹங்கள் என்று சொல்ல கூடிய முதன்மை சுப கிரஹமான குருவின் பார்வை சுப ஒளி எந்த வீட்டில் பட்டாலும் அந்த வீடு கண்டிப்பாக வலு பெரும். பழமொழி கூட "குரு பார்க்க கோடி நன்மை" என்று உள்ளது. அப்பேற்பட்ட குருவின் பார்வையானது தீமையை தடுத்து நன்மையை தர வல்லது. எடுத்துக்காட்டாக புத்ர ஸ்தானத்தை குரு பார்த்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு என்பதை உறுதியாக சொல்லமுடியும். அனால் குருவே வலு இழந்து நீசமானால் பார்வை பலம் மிகவும் குறைந்து இருக்கும். அதனால் எந்த கிரஹமானாலும் பார்வை பார்க்கும் முன்னர் அவை வலுவாக இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளவும்.
எந்த கிரஹமானாலும் அதனுடைய பார்வை என்பது அதன் காரகத்துவதை (தன்மை) முதலில் பார்க்கவேண்டும், அதற்கு அடுத்ததை தான் அந்த கிரஹத்தின் அதிபத்தியதை பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக