புதன், 13 மார்ச், 2019

திக் பலம் சூட்சமங்கள்


கிரஹங்களின் பலத்தை கணக்கிடும்போது முதலில் ஸ்தான பலம் அதனையடுத்து திக் பலனை பார்க்கவேண்டும். திக் பலமானது கிரஹங்களின் திசை வலிமையை[Directional strength] குறிக்கும். திசையானது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியவை குறிக்கும்.

ராகு கேதுக்களை தவிர்த்து மற்ற அணைத்து கிரஹங்களுக்கும் குறிப்பிட்ட திசையில் வலிமை அடைகிறது. திசை என்பது லக்கினத்தை அடிப்படையாக வைத்தே அமையும். அதாவது நாம் பிறகும் லக்கினம் எதுவோ அது கிழக்கு திசையை குறிக்கும். லக்கினத்திற்கு நான்காம் இடம் தெற்கு திசையும், ஏழாம் இடம் மேற்கு திசையும், பத்தாம் இடம் வடக்கு திசையை குறிக்கும்.

சரி, ஒவ்வொரு கிரகத்திற்கும் உண்டான திசை வலிமையை பாப்போம்.

திசை வீடு திக் பலம் பெரும் கிரகம் 
கிழக்கு லக்கினம் - 1ஆம் வீடு குரு, புதன்
தெற்கு நான்காம் வீடு சந்திரன், சுக்ரன்  
மேற்கு ஏழாம் வீடு சனி 
வடக்கு பத்தாம் வீடு சூரியன், செவ்வாய்


எடுத்துக்காட்டாக மிதுன லக்கினத்தை வைத்துப்பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தை பார்தோமானால் லக்கினத்தில் குரு மற்றும் புதன், நான்காம் இடத்தில் சந்திரன், ஏழாம் இடத்தில் சனி மற்றும் பத்தாம் இடத்தில் சூரியன் செவ்வாய் திக் பலத்தை பெறுவார்கள்.


சூரியன்
 செவ்வாய் 
ல/
குரு புதன் 
சனி சந்திரன் 

ஒரு கிரகம் ஸ்தான பலம் இழந்தாலும் அக்கிரகம் திக் பலம் பெற்றிந்தால் அந்த கிரகம் வலிமையாக இருக்கின்றது என்று அர்த்தம்.

ஸ்தான பலம் என்பது கிரகம் நேர்வலு அடையும், திக் பலம் என்பது நேர்வலு இல்லாமல் மறைமுக  வலு அடைகிறது. எடுத்துக்காட்டாக இயற்கை பாப கிரகமான சனி நேர்வலு அடையும்போது அக்கிரகம் அதனுடைய காரகத்துவமான அழுக்கு, அடிமைதொழில், மெக்கானிக், கடைநிலை ஊழியர், நீண்ட ஆயுள் குடுக்கக்கூடியவர். அதே சனி நேர்வலுவற்று மறைமுக வலுகூடி அதாவது நீசமாகி சுப கிரக பார்வை அல்லது திக் பலம் பெறுவதோ அல்லது வர்கோத்தமம் பெறுவது அந்த ஜாதகருக்கு நல்ல பலன் தரும். 

சரி, திக் பலம் பெற்ற கிரகம் எவ்வாறு பலன் தரும் ? 

எடுத்துக்காட்டாக குரு திக் பலம் அடைத்தது என்றால் குரு ஆனவர் ஒன்றாம் வீட்டின் திசை அதாவது கிழக்கு திசை மூலமாக நன்மை செய்வார். எந்த கிரகம் ஆனாலும் அந்த கிரகம் திக் பலம் அடையும் வீட்டின் நடுப்பகுதி 15" degree முழு திக் பலம் அடையும். 

எடுத்துக்காட்டாக அதிகாலையில் சூரியன் கிழக்கு திசையில் உதிக்கும் பொழுது குரு மற்றும் புதன் திக் பலம் அடையும் பொழுது அதனுடைய காரகத்துவமான கல்வி, ஞானம், புத்திகூர்மை ஆகியவை அதிகளவில் பூமியில் மனிதர்களுக்கு கிடைக்கும். 

அதே போல் சனி ஒரு இருள் கிரகம் அதனால் சூரியன் மேற்கு திசை அதாவது மாலை நேரம் முழு பலம் அடையும். ஒரு கிரகம் திக் பலம் அடையுமானால் அதனுடைய காரகத்துவம் வலு பெரும்.

சூரியன் மற்றும் செவ்வாய் சக்தி வாய்த்த கிரகம் மதியம் முழுவதும் கிடைக்கும். 

சந்திரன் மற்றும் சுக்ரன்  ஆகியவை மென்மையான கிரகங்களாகும், இவை தூக்கத்திற்கும் அன்பிற்கும் உகந்தவையாகும் (நள்ளிரவில் சூரியன் நான்காவது வீட்டில்இருக்கும்). 

திக் பலம் எவ்வாறு கணக்கிடுவது ?

திக் பலம் அடையும் கிரகம் 60 சஷ்டியாம்சம் பலம் உடையவை. கிரகம் திக் பலம் அடையும் இடத்தை விட்டு வெளியே வர பலத்தை இழக்கும் . அதாவது குரு 15" லக்கினத்தில் முழு பலமும், அதே குரு 7ம் இடத்தில் 15" முழு பலத்தையும் இழப்பார்.  அங்கே  0 சஷ்டியாம்சம் பலம் பெற்று இருப்பார்.



திசை வீடு திக் பலம் இழக்கும்  கிரகம் 
கிழக்கு லக்கினம் - 1ஆம் வீடு சனி 
தெற்கு நான்காம் வீடு சூரியன்செவ்வாய்
மேற்கு ஏழாம் வீடு குருபுதன்
வடக்கு பத்தாம் வீடு சந்திரன், சுக்ரன் 

அதாவது ஒரு கிரகம்  திக் பலம் அடையும் இடத்துக்கு நேர் எதிர் வீட்டில் பலம் இழப்பார். 

சனி, 14 ஏப்ரல், 2018

கிரஹங்களின் பார்வை


ஜோதிடத்தை பொறுத்தவரை ஒன்பது கிரஹங்களில் ராகு கேதுவை தவிர்த்த்து அனைத்து கிரஹத்திற்கும் பார்வை உண்டு. நான் முந்தய தொடரில் குறிப்பிட்டது போல் ராகு கேது என்பவை நிழல் கிரகாம் மட்டுமே. அவைகள் மற்ற கிரஹங்களை போல் இல்லாமல் அவைகள் ஒளி அற்ற நிழல் கிரகம்  மட்டுமே. சூரியனின் நிழல் ராகு, சந்திரனின் நிழல் கேது.


சரி. சென்ற கட்டுரையில் கிரஹங்களின் ஒளி அளவை சனிக்கு வெறும் 1 மதிப்பை பார்க்கும் பொது ஏன் சனிக்கு மட்டும் மிகவும் குறைவான ஒளியளவை பிரதிபலிக்கின்றது என்றால் சனி சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் அதனுடைய ஒளி அளவு பூமிக்கு கிடைப்பது குறைவு. அதுவும் இல்லாமல் சனி ஒரு இருட்டு கிரகம். ராகுவை போல் இல்லாமல் அவை ஒளி பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்தது.


கிரகம் 

பார்வை 

சூரியன் 7
சந்திரன் 7
செவ்வாய் 4, 7, 8
குரு 5, 7, 9
சனி 3, 7, 10
சுக்ரன் 7
புதன் 7


மேலே குறிப்பிட்டது போல் அனைத்து கிரகமும்  தான் இருக்கும் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டை பார்கும். எடுத்துக்காட்டாக ஒரு கிரகம் லக்கினத்தில் இருக்கும் பட்சத்தில் அந்த கிரகம் கண்டிப்பாக தனது ஏழாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்க்கும்.  

சூரியன், சந்திரன், புதன் மற்றும் சுக்ரன் ஆகிய கிரஹங்களுக்கு ஏழாம் பார்வை மட்டுமே உள்ளது.
செவ்வாய், குரு மற்றும் சனிக்கு ஏழாம் பார்வை மட்டுமில்லாமல் சிறப்பு பார்வைகள் உள்ளது .

செவ்வாய்க்கு தான் இருக்கும் வீட்டில் இருந்து நான்காம் பார்வை மற்றும் எட்டாம் பார்வைகள்,
குருவிற்கு தான் இருக்கும் வீட்டில் இருந்து ஐந்தாம் பார்வை மற்றும் ஒன்பதாம் பார்வைகள்,
சனிக்கு தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வைகள் சிறப்பு பார்வைகள்.

சரி. கிரஹங்களின் பார்வைகள் நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பது அந்த கிரஹத்தின் தன்மையை பொறுத்து. பொதுவாக இயற்கை சுப கிரஹங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சுக்ரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் ஆகிய கிரஹங்களின் பார்வை நன்மை அளிக்கும் தன்மை உடையது. இயற்கை பாப கிரஹங்கள் என்று சொல்லக்கூடிய சனி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரஹங்களின் பார்வை தீமை அளிக்கும்.

இங்கே கிரஹங்கள் அணைத்து சுயமாக பார்வை கிடையாது, சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன. 

கிரஹத்தின் பார்வையானது அதன் தன்மையை பிரதிபலிக்கும், அதாவது அதனுடைய காரகத்துவதை பிரதிபலிக்கக்கூடியது. எடுத்துக்காட்டாக சனியின் பார்வை லக்கினத்தில் விழும்போது அந்த ஜாதகர் புடிவாத குணம், கஞ்சத்தனம் மற்றும் சுத்தம் இல்லாதவராக இருக்க வைப்பார். மற்ற கிரஹத்தின் பார்வை அல்லது சுப கிரகம் லக்கினத்தில் இல்லாமல் இருந்தால் மேலே சொன்ன பலன் இருக்கும்.

அதே போல் சுப கிரஹங்கள் என்று சொல்ல கூடிய முதன்மை சுப கிரஹமான குருவின் பார்வை சுப ஒளி எந்த வீட்டில் பட்டாலும் அந்த வீடு கண்டிப்பாக வலு பெரும். பழமொழி கூட "குரு பார்க்க  கோடி நன்மை" என்று உள்ளது. அப்பேற்பட்ட குருவின் பார்வையானது தீமையை தடுத்து நன்மையை தர வல்லது. எடுத்துக்காட்டாக புத்ர ஸ்தானத்தை குரு பார்த்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு என்பதை உறுதியாக சொல்லமுடியும். அனால் குருவே வலு இழந்து நீசமானால் பார்வை பலம் மிகவும் குறைந்து இருக்கும். அதனால் எந்த கிரஹமானாலும் பார்வை பார்க்கும் முன்னர் அவை வலுவாக இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளவும்.

எந்த கிரஹமானாலும் அதனுடைய பார்வை என்பது அதன் காரகத்துவதை (தன்மை) முதலில் பார்க்கவேண்டும், அதற்கு அடுத்ததை  தான் அந்த கிரஹத்தின் அதிபத்தியதை பார்க்க வேண்டும்.

கிரஹங்களின் அதிபத்யம்


ஜோதிடத்தில் பொதுவாக ஒவ்வொரு கிரஹங்களுக்கும் ஆதிபத்ய வீடு உள்ளது. சரி அதிபத்யம் என்பது சொந்த வீடு. சொந்தவீட்டில் அமரும் கிரஹங்கள் அனைத்துமே வலுவுள்ள அமைப்பில் பிரதிபலிக்கும்.

அதேசமயத்தில் கிரஹங்களுக்கு ஆட்சி வீடுகள் மட்டுமல்லாமல் உச்சம், நட்பு, பகை, நீச்சம் மற்றும் சமம் ஆகிய ஆறு  வகையான பலன்கள் உண்டு. 


    ராசி வீடுகள்

    ஆட்சி

    உச்சம்

    பகை

    நீசம்

    நட்பு  

    சமம்

    மேஷம்

    செவ்வாய்  சூரியன்  ராகு கேது  சனி குரு சந்திரன்,   புதன், சுக்ரன்
    ரிஷபம் சுக்ரன் சந்திரன் சூரியன், குரு ராகு கேது புதன், சனி செவ்வாய்
    மிதுனம் புதன்      - குரு   -  சந்திரன், சுக்ரன், சனி , ராகு  சூரியன்
    கடகம் சந்திரன் குரு சுக்ரன், சனி, ராகு கேது  செவ்வாய் செவ்வாய் சூரியன்
    சிம்மம் சூரியன்    - சுக்ரன், சனி, ராகு கேது  - சந்திரன், செவ்வாய், புதன், குரு  - 
      கன்னி புதன் புதன் செவ்வாய் சுக்ரன்சந்திரன், குரு, சனி, ராகு கேது சூரியன்
      துலாம் சுக்ரன் சனி குரு சூரியன்ராகு கேது சந்திரன், செவ்வாய்
      விருச்சகம் செவ்வாய் ராகு   கேது  சனி சந்திரன் சூரியன் சுக்ரன், புதன்
    தனுசு குரு    -    -  - சூரியன், சுக்ரன், ராகு கேது சந்திரன், புதன், சனி
    மகரம் சனி செவ்வாய்  சூரியன்குரு சுக்ரன் , ராகு கேது சந்திரன், புதன், 
    கும்பம் சனி     - சூரியன், ராகு கேது  -  சுக்ரன் செவ்வாய்,
    சந்திரன்,
    புதன்,
    குரு
    மீனம் குரு சுக்ரன்  -  புதன் செவ்வாய், சூரியன், ராகு கேது சந்திரன்,
    சனி


    ராசி கிரஹங்கள் மற்றும் அதன் வலுவும்.

    மேலே 12 வீடுகளுக்கும் அதிபதி மற்றும் உச்சம், பகை, நீச்சம் மற்றும் சமம் ஆகியவைப்பற்றி  குறிப்பிட்டுளேன். இவைகளில் சூரியன் சந்திரனை தவிர்த்து மீதமுள்ள கிரஹங்களுக்கு இரண்டு வீடுகளுக்கு அதிபதி ஆகின்றனர்.

    ராகு கேதுகளுக்கு சொந்த வீடு கிடையாது. அவைகள் நிழல் கிரகம் மட்டுமே. 

    ராகு தான் இருக்கும் வீட்டை கவர்ந்து அந்த வீட்டின் பலன்களையும் மற்றும் அந்த வீட்டின் அதிபதியின் பலன்களை தன்னுடைய தசையில் தரும். அதே போல் தன்னுடன் சேர்த்து இருக்கும் கிரஹத்தின் பலனையும் கவரும் தன்மை ராகுவிற்கு உண்டு.

    கேதுவை பொறுத்தவரை ராகுவை போல் தான் இருக்கும் வீட்டின் பலனை கவராது. 

    ஒரு கிரகம் உச்சம் அல்லது ஆட்சியாக இருக்கும் பொது அதிக வலு பெறுகின்றன. ஏன் கிரஹங்களுக்கு இவ்வாறான வலு ஏற்படுகிறதென்றால் ஒவ்வொரு கிரஹங்களும் தனி தன்மை வாய்ந்தது. கிரஹங்கள் பிரதிபலிக்கும் ஒளியானது மற்ற கிரஹங்களுக்கு எதிர் தன்மையுடையதாக இருக்கும்பட்சத்தில் அவை பகை கிரஹங்கள் ஆகின்றன.

    பொதுவாக கிரஹங்களுக்கு இரண்டு அணி உள்ளது . தேவ குரு அணி(குரு) மற்றும் அசுர குரு அணி(சுக்ரன்).
               

    தேவ குரு அணிஅசுர குரு அணி
    குருசுக்ரன்
    சூரியன்சனி
    சந்திரன்புதன்
    செவ்வாய்ராகு கேது


    மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு அணி கிரஹங்களும் எதிர் தன்மை உடையவை. ஒரே அணியில் உள்ள கிரஹங்கள் அனைத்தும் மற்ற கிரஹங்களுக்கு நட்பு நிலையில் வருபவை. எடுத்துக்காட்டாக குரு வீட்டில் சூரியன் அல்லது சந்திரன் அமரும் போது கிரஹங்கள் தனது வலுவை இழப்பதில்லை என்பதே உண்மை.

    அதே போல் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கிரஹங்கள் அதிபதி ஆகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிரஹங்களின் நட்சத்திர ஆதிபத்யம்.

    நக்ஷத்திர அதிபதி அட்டவணை 


    27 நக்ஷத்திரம் மற்றும் பாகை


    1. அஸ்வினி 

    வீடு மற்றும் பாகை 0.00 மேஷம் -13.20 மேஷம்
    அதிபதி கேது 

    2. பரணி 

    வீடு மற்றும் பாகை 13.20 மேஷம் -26.40 மேஷம்
    அதிபதி சுக்ரன் 








    3. கார்த்திகை  

    வீடு மற்றும் பாகை 26.40 மேஷம் -10.00 ரிஷபம்
    அதிபதி சூரியன் 

    4. ரோகினி  

    வீடு மற்றும் பாகை 10.00 ரிஷபம் - 23.20 ரிஷபம்
    அதிபதி சந்திரன் 









    5. மிருகஷீரிஷம்  

    வீடு மற்றும் பாகை 23.20 ரிஷபம் 6.40 மிதுனம்
    அதிபதி செவ்வாய் 

    6. திருவாதிரை  

    வீடு மற்றும் பாகை 6.40 மிதுனம் 20.00 மிதுனம்
    அதிபதி ராகு 








    7. புனர்பூசம் 

    வீடு மற்றும் பாகை 20.00 மிதுனம் 3.20 கடகம்
    அதிபதி குரு 

    8. பூசம் 

    வீடு மற்றும் பாகை 3.20 கடகம் 16.40 கடகம்
    அதிபதி சனி 







    9. ஆயில்யம்  

    வீடு மற்றும் பாகை 16.40 கடகம் 30.00 கடகம்
    அதிபதி புதன் 

    10. மகம்  

    வீடு மற்றும் பாகை 30.00 கடகம் -13.20 சிம்மம்
    அதிபதி கேது 







    11. பூரம் 

    வீடு மற்றும் பாகை 13.20 சிம்மம் -26.40 சிம்மம்
    அதிபதி சுக்ரன் 

    12. உத்திரம் 

    வீடு மற்றும் பாகை 26.40 சிம்மம் -10.00 கன்னி 
    அதிபதி சூரியன் 







    13. ஹஸ்தம்  

    வீடு மற்றும் பாகை 10.00 கன்னி - 23.20 கன்னி
    அதிபதி சந்திரன்  

    14. சித்திரை  

    வீடு மற்றும் பாகை  23.20 கன்னி 6.40 துலாம் 
    அதிபதி செவ்வாய்  








    15. சுவாதி 

    வீடு மற்றும் பாகை 6.40 துலாம் 20.00 துலாம்
    அதிபதி ராகு 

    16. விசாகம் 

    வீடு மற்றும் பாகை 20.00 துலாம்-3.20விருச்சிகம்
    அதிபதி குரு  







    17. அனுஷம் 

    வீடு மற்றும் பாகை 3.20விருச்சிகம் 16.00விருச்சிகம்
    அதிபதி சனி  

    18. கேட்டை  

    வீடு மற்றும் பாகை 16.00விருச்சிகம் 30.00விருச்சிகம்
    அதிபதி புதன் 








    19. மூலம் 

    வீடு மற்றும் பாகை 30.00விருச்சிகம் - 13.20 தனுசு
    அதிபதி கேது 

    20. பூராடம் 

    வீடு மற்றும் பாகை   13.20தனுசு  -  26.40தனுசு
    அதிபதி சுக்ரன்  







    21. உத்திராடம் 

    வீடு மற்றும் பாகை 26.40 தனுசு - 10.00 மகரம் 
    அதிபதி சூரியன் 

    22. திருவோணம் 

    வீடு மற்றும் பாகை   10.00  மகரம்  - 23.20 மகரம்
    அதிபதி சந்திரன் 







    23. அவிட்டம்  

    வீடு மற்றும் பாகை 23.20 மகரம் 6.40 கும்பம் 
    அதிபதி செவ்வாய் 

    24. சதயம் 

    வீடு மற்றும் பாகை  6.40  கும்பம் 20.00 கும்பம்
    அதிபதி ராகு 







    25. பூரட்டாதி   

    வீடு மற்றும் பாகை 20.00 கும்பம் 3.20 மீனம் 
    அதிபதி குரு 

    26. உத்திரட்டாதி 

    வீடு மற்றும் பாகை 3.20 மீனம் -16.40 மீனம்
    அதிபதி சனி 







    27.ரேவதி    

    வீடு மற்றும் பாகை 16.40 மீனம் -30.00 மீனம்
    அதிபதி புதன் 



    மேலே குறிப்பிட்டது போல் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று நக்ஷத்திரங்கள் அமைத்திருக்கும். 


    எடுத்துக்காட்டாக மேஷம் 30 பாகையில் 

    [

    0.00 மேஷம் to 13.20 மேஷம்] -> அஸ்வினி 
    [13.20 மேஷம் to 26.40 மேஷம்] -> பரணி  
    [26.40 மேஷம் to 30.00 மேஷம்] -> கார்த்திகை



    இதுவரை கிரஹங்களின் ராசி ஆதிபத்யம் மற்றும் நக்ஷத்திர அதிபத்யத்தை பார்த்தோம். அடுத்த கட்டுரையில் கிரஹங்களின் பார்வை பற்றியவை பார்ப்போம். 


    வெள்ளி, 13 ஏப்ரல், 2018

    கிரகங்களின் ஒளி


    ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள். சரி அவைகள் எப்படி உலகிலுள்ள ஜீவா ராசிகளை தொடர்பு கொள்கின்றது ? வானமண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை பிரதிபலிக்கின்றது . மனிதர் ஆகிய நம்மால் அதை பார்க்க முடியாது.

    சரி. வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம் .

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

    இதில் மனிதர்களால் பார்க்ககூடிய கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் சனி.

    சரி ராகு, கேதுக்கள் ஏன் பார்க்க முடுயாது என்றால் அவைகள் நிழல் கிரகங்கள். சூரியன் மற்றும் சந்திரனுடைய  நிழல்கள் தான் ராகு கேதுக்கள் .

    நான் மேலே சொன்ன கிரகங்கள் அனைத்தும் சூரியனை மையமாக வைத்தே இயங்குகிறது. அதாவது சூரிய ஒளியை வாங்கி அனைத்து கிரகங்கள் தன்னுடைய  சுபாவங்களுக்கு தகுந்தாற்  போல் பிரதிபலிக்கின்றது.

    சரி . எந்தெந்த கிரகம் எவ்வளவு ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கின்றது என்பதை பார்ப்போம்.

    சூரியனின் கதிர் அளவு – 30
    சந்திரன் – 16
    புதன் - 8
    சுக்கிரன் – 12
    செவ்வாய் – 6
    குரு – 10
    சனி – 1

    மேலே குறிப்பிட்டது போல் சூரியன் ஓளியை அடுத்து சந்திரன் மற்றும் கிரகங்கள் வரிசை சூரியன் அருகில் இருந்து புதன், சுக்கிரன், செவ்வாய், குரு மற்றும் சனி.

    இங்கே சனி சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளது .

    சரி. பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் உள்ள கிரககள் புதன் மற்றும் சுக்ரன். பூமிக்கும் வெளிச்சுற்றில் உள்ள  கிரககள் செவ்வாய், குரு மற்றும் சனி.



    About myself - என்னை பற்றி


    I am very happy to start my first blog in Vedic astrology. Basically I am a software Engineer works in multinational company and young student to learn Vedic astrology recent days.

    My Intention would be everybody should know the Vedic astrology and i am here to write from the basics of astrology, which everybody will understand with the simple concepts.

    There are lot of Vedic astrology books, i have been reading and also got a knowledge from the internet. Basically i used to study astrology, whenever i am getting a free time.

    I am here to share my knowledge of my understanding about the Vedic astrology and hidden theories. Stay tuned :)


    வேத ஜோதிடத்தில் என் முதல் வலைப்பதிவு தொடங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. அடிப்படையில் நான் ஒரு மென்பொருள் பொறியாளர், சமீபத்திய நாட்களில் வேதா ஜோதிடம் பயிலும் இளம் மாணவன் 😃

    எனது நோக்கம் அனைவருக்கும் வேத ஜோதிடத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.ஜோதிடத்தின் அடிப்படையிலிருந்து எழுதுவதற்கு இருக்கிறேன்.

    நிறைய வேத ஜோதிடம் புத்தகங்கள் உள்ளன, நான் படித்து வருகிறேன், மேலும் இணையத்திலிருந்து சில புத்தகங்களும் படித்து வருகிறேன். நான் ஓய்வு நேரத்தில் ஜோதிடத்தைப் பற்றி படிக்கும் பழக்கம் உள்ளவன்.

    வேத ஜோதிடம் மற்றும் மறைந்த கோட்பாடுகள் பற்றிய எனது புரிதலின் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு இங்கு நான் இருக்கிறேன். காத்திருங்கள் :)



    திக் பலம் சூட்சமங்கள்

    கிரஹங்களின் பலத்தை கணக்கிடும்போது முதலில் ஸ்தான பலம் அதனையடுத்து திக் பலனை பார்க்கவேண்டும். திக் பலமானது கிரஹங்களின் திசை வலிமையை[Directi...