கிரஹங்களின் பலத்தை கணக்கிடும்போது முதலில் ஸ்தான பலம் அதனையடுத்து திக் பலனை பார்க்கவேண்டும். திக் பலமானது கிரஹங்களின் திசை வலிமையை[Directional strength] குறிக்கும். திசையானது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியவை குறிக்கும்.
ராகு கேதுக்களை தவிர்த்து மற்ற அணைத்து கிரஹங்களுக்கும் குறிப்பிட்ட திசையில் வலிமை அடைகிறது. திசை என்பது லக்கினத்தை அடிப்படையாக வைத்தே அமையும். அதாவது நாம் பிறகும் லக்கினம் எதுவோ அது கிழக்கு திசையை குறிக்கும். லக்கினத்திற்கு நான்காம் இடம் தெற்கு திசையும், ஏழாம் இடம் மேற்கு திசையும், பத்தாம் இடம் வடக்கு திசையை குறிக்கும்.
சரி, ஒவ்வொரு கிரகத்திற்கும் உண்டான திசை வலிமையை பாப்போம்.
திசை | வீடு | திக் பலம் பெரும் கிரகம் |
---|---|---|
கிழக்கு | லக்கினம் - 1ஆம் வீடு | குரு, புதன் |
தெற்கு | நான்காம் வீடு | சந்திரன், சுக்ரன் |
மேற்கு | ஏழாம் வீடு | சனி |
வடக்கு | பத்தாம் வீடு | சூரியன், செவ்வாய் |
எடுத்துக்காட்டாக மிதுன லக்கினத்தை வைத்துப்பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தை பார்தோமானால் லக்கினத்தில் குரு மற்றும் புதன், நான்காம் இடத்தில் சந்திரன், ஏழாம் இடத்தில் சனி மற்றும் பத்தாம் இடத்தில் சூரியன் செவ்வாய் திக் பலத்தை பெறுவார்கள்.
ஒரு கிரகம் ஸ்தான பலம் இழந்தாலும் அக்கிரகம் திக் பலம் பெற்றிந்தால் அந்த கிரகம் வலிமையாக இருக்கின்றது என்று அர்த்தம்.
ஸ்தான பலம் என்பது கிரகம் நேர்வலு அடையும், திக் பலம் என்பது நேர்வலு இல்லாமல் மறைமுக வலு அடைகிறது. எடுத்துக்காட்டாக இயற்கை பாப கிரகமான சனி நேர்வலு அடையும்போது அக்கிரகம் அதனுடைய காரகத்துவமான அழுக்கு, அடிமைதொழில், மெக்கானிக், கடைநிலை ஊழியர், நீண்ட ஆயுள் குடுக்கக்கூடியவர். அதே சனி நேர்வலுவற்று மறைமுக வலுகூடி அதாவது நீசமாகி சுப கிரக பார்வை அல்லது திக் பலம் பெறுவதோ அல்லது வர்கோத்தமம் பெறுவது அந்த ஜாதகருக்கு நல்ல பலன் தரும்.
சரி, திக் பலம் பெற்ற கிரகம் எவ்வாறு பலன் தரும் ?
எடுத்துக்காட்டாக குரு திக் பலம் அடைத்தது என்றால் குரு ஆனவர் ஒன்றாம் வீட்டின் திசை அதாவது கிழக்கு திசை மூலமாக நன்மை செய்வார். எந்த கிரகம் ஆனாலும் அந்த கிரகம் திக் பலம் அடையும் வீட்டின் நடுப்பகுதி 15" degree முழு திக் பலம் அடையும்.
எடுத்துக்காட்டாக அதிகாலையில் சூரியன் கிழக்கு திசையில் உதிக்கும் பொழுது குரு மற்றும் புதன் திக் பலம் அடையும் பொழுது அதனுடைய காரகத்துவமான கல்வி, ஞானம், புத்திகூர்மை ஆகியவை அதிகளவில் பூமியில் மனிதர்களுக்கு கிடைக்கும்.
அதே போல் சனி ஒரு இருள் கிரகம் அதனால் சூரியன் மேற்கு திசை அதாவது மாலை நேரம் முழு பலம் அடையும். ஒரு கிரகம் திக் பலம் அடையுமானால் அதனுடைய காரகத்துவம் வலு பெரும்.
சூரியன் மற்றும் செவ்வாய் சக்தி வாய்த்த கிரகம் மதியம் முழுவதும் கிடைக்கும்.
சந்திரன் மற்றும் சுக்ரன் ஆகியவை மென்மையான கிரகங்களாகும், இவை தூக்கத்திற்கும் அன்பிற்கும் உகந்தவையாகும் (நள்ளிரவில் சூரியன் நான்காவது வீட்டில்இருக்கும்).
திக் பலம் எவ்வாறு கணக்கிடுவது ?
திக் பலம் அடையும் கிரகம் 60 சஷ்டியாம்சம் பலம் உடையவை. கிரகம் திக் பலம் அடையும் இடத்தை விட்டு வெளியே வர பலத்தை இழக்கும் . அதாவது குரு 15" லக்கினத்தில் முழு பலமும், அதே குரு 7ம் இடத்தில் 15" முழு பலத்தையும் இழப்பார். அங்கே 0 சஷ்டியாம்சம் பலம் பெற்று இருப்பார்.
சூரியன் செவ்வாய் | ல/ குரு புதன் | ||
சனி | சந்திரன் |

திசை | வீடு | திக் பலம் இழக்கும் கிரகம் |
---|---|---|
கிழக்கு | லக்கினம் - 1ஆம் வீடு | சனி |
தெற்கு | நான்காம் வீடு | சூரியன், செவ்வாய் |
மேற்கு | ஏழாம் வீடு | குரு, புதன் |
வடக்கு | பத்தாம் வீடு | சந்திரன், சுக்ரன் |
அதாவது ஒரு கிரகம் திக் பலம் அடையும் இடத்துக்கு நேர் எதிர் வீட்டில் பலம் இழப்பார்.